உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வெற்றி பெறும் வீரர்கள் மாநில போட்டியில் பங்கேற்பர் | Sports| Champion| Athletics| Tiruppur|

வெற்றி பெறும் வீரர்கள் மாநில போட்டியில் பங்கேற்பர் | Sports| Champion| Athletics| Tiruppur|

வெற்றி பெறும் வீரர்கள் மாநில போட்டியில் பங்கேற்பர் | Sports| Champion| Athletics| Tiruppur| பள்ளி கல்வித்துறை சார்பில், நவம்பர் முதல் வாரம் மாநில விளையாட்டு போட்டி நடைபெறுகிறது. இதற்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான மாவட்ட விளையாட்டு போட்டி திருப்பூரில் இன்று துவங்கியது ஏழு குறுமையங்களில் தனிநபர் பிரிவில் ஏழு பேர், குழு பிரிவில் 21 பேர் பங்கேற்றனர். திருப்பூர் தாராபுரம் ரோடு மோகன்ஸ் பேட்மின்டன் அகாடமியில், 19 வயது வீரர், வீராங்கனைகளுக்கான பேட்மின்டன் போட்டி நடந்தது. தனிநபர் மற்றும் குழு பிரிவில் மொத்தம் 210 பேர் பங்கேற்றனர். கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பதிநான்கு வயது பிரிவு மாணவர் கால்பந்து போட்டி நடந்தது போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் மகேந்திரன், பள்ளியின் தாளாளர் சின்னையன் துவக்கி வைத்தனர். ஏழு அணிகளை சேர்ந்த 126 பேர் விளையாடினர். சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரியில் 14, 17 மற்றும் 19 வயது மாணவர் பிரிவு பால் பேட்மின்டன் போட்டிகள் நடந்தது. வரும் 28ம் தேதி வரை மாவட்டம் முழுதும் பல்வேறு மைதானங்களில் போட்டி தொடர்ந்து நடைபெறும். பல்வேறு பிரிவுகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் வீரர் வீராங்கனைகள் மாநிலப் போட்டியில் பங்கேற்பர். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

அக் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை