ஆபத்துகள் ஆயிரம் ஊருக்குள்ள... பாகுபலி நீ இரு காட்டுக்குள்ள... Baahubali Elephant | Coimbatore
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி பகுதிகளில் பாகுபலி என்ற காட்டு யானை சுற்றி வருகிறது. அடர்ந்த காட்டுக்குள் செல்வதே கிடையாது. அதற்கு வலசை பாதையே மறந்து விட்டது என்றே சொல்லலாம். பாகுபலி யானையினால் வாழை, தென்னை போன்ற பயிர்கள் சேதப்படுத்தப்படுவதால் அதற்கான சரியான இழப்பீடும் வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் விவசாயிகள் சார்பில் முன் வைக்கப்படுகிறது. அது ஊருக்குள் சர்வசாதாரணமாக வந்து செல்வதால் மக்கள் ஒரு வித அச்சத்துடனேயே வாழ்கிறார்கள். மேலும் பாகுபலி யானையை அடர்ந்த காட்டுப்பகுதியில் விட்டால் அது மேலும் பல ஆண்டுகள் வாழும் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள். இப்படி பாகுபலி யானையை பற்றிய சுவையான தகவல்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.