உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் | Baskatbal State Leval Tournament | Covai

ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் | Baskatbal State Leval Tournament | Covai

ஆக்ரோஷமாக விளையாடும் வீரர் | Baskatbal State Leval Tournament | Covai கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியில் 50வது மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான பி.எஸ்.ஜி. டிராபி கூடைப்பந்து போட்டி நேற்று முன்தினம் துவங்கியது. இதில் 20க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் போட்டியில் டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரி 105-78 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி. அலுமினி அணியை வென்றது. தொடர்ந்து லயோலா கல்லுாரி 89-47 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி பி அணியையும், ஜேப்பியார் பல்கலை 70-60 என்ற புள்ளிகளில் திருச்சி புனித ஜோசப் கல்லுாரியை அணியையும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி ஏ அணி 79-72 என்ற புள்ளிகளில் டி.ஜி., வைஷ்ணவ் கல்லுாரி அணியையும் வென்றது. டி.ஜி., வைஷ்ணவ் அணி 82-48 என்ற புள்ளிகளில் டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி அணையும், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி ஏ 74-54 என்ற புள்ளிகளில் பி.எஸ்.ஜி., அலுமின அணியையும், லயோலா அணி 87-70 என்ற புள்ளிகளில் ஜேப்பியார் பல்கலை அணியையும் வென்றது. இப்போட்டிகள் இன்று நிறைவடைகிறது.

மார் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !