மண்டல அளவில் நடந்த போட்டியில் முதலிடம் பிடித்த 11 அணிகள் பங்கேற்பு | Basketball Tournament
இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் மற்றும் கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லுாரி சார்பாக பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில கூடைப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லுாரியில் துவங்கியது. போட்டியை கல்லுாரி முதல்வர் கிரிராஜ் மற்றும் டெக்ஸ்டைல் துறை தலைவர் செந்தில் குமார் துவக்கி வைத்தனர். இப்போட்டியில் மண்டல அளவில் நடந்த போட்டியில் முதல் இடம் பிடித்த 11 அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில் சேலம் அணி 42 - 8 என்ற புள்ளிக் கணக்கில் மதுரை அணியையும், வேலுார் அணி 38 - 23 என்ற புள்ளிக் கணக்கில் திருச்சி அணியையும், தஞ்சாவூர் அணி 30 - 29 என்ற புள்ளிக் கணக்கில் நாகை மற்றும் புதுச்சேரி அணியையும், சென்னை அணி 20 - 0 என்ற புள்ளிக் கணக்கில் காஞ்சிபுரம் அணியையும் வீழ்த்தின. இப்போட்டி நாளை நிறைவடைகிறது. வெற்றி பெறும் அணிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்படும்.