உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விறுவிறுப்பான ஆட்டம் | basketball tournament | thirupur

விறுவிறுப்பான ஆட்டம் | basketball tournament | thirupur

விறுவிறுப்பான ஆட்டம் / basketball tournament / thirupur திருப்பூர் வடக்கு குறுமைய கூடைப்பந்து போட்டி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. இதில் 14, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோர் என மூன்று பிரிவிகளில் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 13 அணிகள் பங்கேற்றன. 14 வயது பிரிவு இறுதி போட்டியில் இன்பென்ட் ஜீசஸ் மற்றும் ஏவிபி பள்ளி அணிகள் மோதியது. அதில் இன்பென்ட் ஜீசஸ் பள்ளி அணி 18 க்கு 2 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 17 வயது பிரிவு இறுதி போட்டியில் இன்பென்ட் ஜீசஸ் மற்றும் வி கே அரசு பள்ளி அணிகள் மோதியது. அதில் சிறப்பாக விளையாடி 29 க்கு 0 என்ற புள்ளி கணக்கில் இன்பென்ட் ஜீசஸ் அணி வெற்றி பெற்றது. அதே மைதானத்தின் உள்ளரங்கில் இறகுப் பந்துப் போட்டி நடந்தது. அதில் 120 மாணவர்கள் பங்கேற்றனர். 14, 17 மற்றும் 19 வயதுகு உட்பட்டோர் பிரிவில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் மொத்தம் 120 பேர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெறுபவர்கள் மாவட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்படுவர். போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் செய்தனர்.

ஜூலை 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !