உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 1000 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| Bharathiyar university| sports meet | Athletic tournament| Covai

1000 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| Bharathiyar university| sports meet | Athletic tournament| Covai

1000 வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| Bharathiyar university| sports meet | Athletic tournament| Covai பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையேயான 43வது தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று துவங்கியது. இதில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 73 கல்லூரிகளில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் சிவக்குமார் போட்டிகளை துவக்கிவைத்தார். மாணவர்களுக்கான அரை மராத்தான் போட்டியில், தினகரன், ஹரிஷ், பிரகாஷ், கபிலன், வீரபத்திரன், சேம்குமார் ஆகியோர் முதல் ஆறு இடங்களை பிடித்தனர். வாக்கிங் போட்டியில், சாலமன், பிரனேஷ், கதிர்வேல் ஆகியோர் முதல் மூன்று இடங்களை வென்றனர். 500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் யோகேஸ்வர், நவீன் பிரபு, ஆரோக்கியசாமி ஆகியோர் முதல் மூன்று இடம் பிடித்தனர். 110 மீட்டர் தடை தாண்டுதலில் மணிகண்டன், தனுஷ் கருப்பய்யா, வெற்றி செல்வன் ஆகியோர் வென்றனர். மாணவியருக்கான மும்முறை தாண்டுதலில், பிரவீனா, வர்ஷினி, ஸ்ரீஹனிசா அபாரமாக விளையாடி வெற்றி பெற்றனர் 100 மீட்டர் தடை தாண்டுதலில் அஷ்விததன்யா, மிரம் ரிசன், மார்டினா சோனாலிகா வெற்றி பெற்றனர். 5000 மீ., ஓட்டத்தில் ஹேமதி, விகாஷினி, சுபிக்ஷா முதல் மூன்று இடங்களை பிடித்தனர். குண்டு எறிதலில் அனுஸ்ரீ, தீபா, ராகவர்த்தினி வெற்றி பெற்றனர். தொடர்ந்து போட்டிகள் நடக்கின்றன.

டிச 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !