பூட்டான் தேசிய தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்
பூட்டான் தேசிய தின விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் | Bhutan National day celebration | sadhguru special guest | Bhutan பூட்டான் நாட்டின் 177 வது தேசிய தின விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கே வாங்சுக்கின் அரச விருந்தினராக கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்து கொண்டார். சத்குரு தனது எக்ஸ் பக்கத்தில் பூட்டான் மக்களுக்கு தேசிய தின வாழ்த்துகளை தெரிவித்தார். பூட்டான் மக்களின் உபசரிப்பு நெகிழ்ச்சி ஊட்டுவதாகவும், அவர்களின் தேசிய தினத்தில் அவர்களுடன் இருப்பது பெரும் பாக்கியம் ஆகும் என்றும் பதிவிட்டார். விழா கொண்டாட்டங்கள் இன்று மாலை கலாச்சார இசை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் நிறைவு பெறும்.
டிச 18, 2024