உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் குழுவினர் 646 கி.மீ., பைக் பயணம்

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் குழுவினர் 646 கி.மீ., பைக் பயணம்

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் குழுவினர் 646 கி.மீ., பைக் பயணம் | Coonoor Madras Regiment Military Mans Bike Rally | Nilgiris குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் குழுவினர் 646 கிலோமீட்டர் பைக் பயணம் மேற்கொண்டு, கர்நாடகாவில் முன்னாள் படை வீரர்களின் குறைகளை கேட்டு, பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தனர். இவர்களுக்கு வெலிங்டன் எம்ஆர்சி கமாண்டண்ட் கிருஷ்ண னேந்து தாஸ் உட்பட ராணுவத்தினர் வரவேற்பு அளித்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சார்பில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்துரையாடவும், ஓய்வூதியம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான குறைகளை கேட்டு அறியவும் வெலிங்டன் பேரக்ஸில் ராணுவ வீரர்களின் பைக் ஊர்வலம் கடந்த 20ல் துவங்கியது. கேப்டன் முனீஸ் குமார் தன்கர் தலைமையில், இளநிலை ஆணையர் அதிகாரிகள், ராணுவ வீரர்கள் உட்பட 8 பேர் கொண்ட குழு கர்நாடகா மாநிலம் மாண்டியா, மைசூரு, சிக்கமங்களூரு உட்பட 6 மாவட்டங்களில் 646 கி.மீ., தூரம் பயணம் செய்தனர். ராணுவ வீரர்கள் மற்றும் முன்னாள் படை வீரர்களிடையே முன்னாள் படை வீரர்களின் குறைகளை கேட்டறிந்தனர். ராணுவத்தின் ஸ்பர்ஷ் ஆன்லைன் பதிவு பயன்பாடு குறித்து தெரிவித்தனர். ஓய்வூதியம் ஆவணங்கள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 1971 போரில் உயிர் நீத்த ராணுவ வீரர் ஹரிஜனா சுப்பைய்யா முத்தன்னாவின் தாயார் பூவம்மாவின் சொந்த ஊருக்கு சென்று பங்களாதேஷ் அரசிடமிருந்து பெறப்பட்ட நினைவு பரிசு மற்றும் பாராட்டு கடிதத்தை வழங்கி கவுரவித்தனர். இந்த குழுவினர் வெலிங்டன் வந்தனர். அவர்களை கொடியசைத்து வரவேற்ற எம்ஆர்சி கமாண்டன்ட் கிருஷ்ணனேந்து தாஸ் பாராட்டி பரிசுகள் வழங்கினர். ராணுவக் குழுவினரை நோடல் அதிகாரிகள், மாவட்ட சைனிக் வாரிய அதிகாரிகள் உட்பட ராணுவத்தினர் ஆதரவு அளித்து பாராட்டு தெரிவித்தனர். இக்குழுவின் விழிப்புணர்வு பைக் ஊர்வலம் முன்னாள் படை வீரர்கள் சமூகத்தினரால் பெரிதும் பாராட்டப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

ஜன 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !