உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையின் பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு வந்தது இப்படி தானாம் | BJP Annamalai | Coimbatore

கோவையின் பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு வந்தது இப்படி தானாம் | BJP Annamalai | Coimbatore

கோவை சிவானந்தா காலனி பொங்கி அம்மாள் வீதியில் கட்டிய சாக்கடை மண் மூடி கேட்பாரற்று கிடந்தது. மழைக் காலங்களில் கழிவுநீர் வெளியேறி முடியாமல் ரோட்டில் தேங்கி விடும். மக்கள் வீதியில் நடக்க முடியாமல் தவிப்பது வாடிக்கையாக இருந்தது. கவுன்சிலர் மேயர் வரை அழுத்தம் கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். இதற்கிடையே லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மக்கள் விரக்தியில் இருந்தால் அது ஓட்டு பதிவில் பாதிக்கும் என்று ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் மாநகராட்சி காதில் போட்டு விட்டனர். இதன் எதிரொலியாக பல ஆண்டாக கண்டுகொள்ளாத சாக்கடை கால்வாயை இப்போது தடாலடியாக தூர்வாரி உள்ளனர். இதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். கோவையில் அண்ணாமலை நிற்கிறார். அவரை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என்பதில் திமுக தீவிரமாக உள்ளது. இதனால் மக்களுக்கு சிறிய அசவுகரியம் கூட இருக்க கூடாது. அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று கோவை உள்ளாட்சி அமைப்புகளுக்கு திமுக உத்தரவு போட்டிருப்பதாக உள்ளூர் பாஜவினர் கூறினர்.

மார் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை