ரவுடிகள் அட்டகாசத்தை தடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல் | Palladam | BJP area leader
பல்லடம் பணப்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் பாஜக பணப்பாளையம் கிளை தலைவராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் டைமண்ட் டீ தூள் வியாபாரம் செய்கிறார். இருவரும் ராயர்பாளையம் பகுதியில் பேசிக்கொண்டு இருந்தனர். அங்கு பட்டாகத்தியுடன் வந்த 8 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சராமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தினர் வருவதை கண்ட கும்பல் அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் கிடந்த தமிழ்ச்செல்வன், டைமண்ட் இருவரையும் பல்லடம் அரசு ஆஸ்பிடலில் அனுமதித்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் தமிழ்ச்செல்வன் தனியார் ஆஸ்பிடலில் சிகிச்சையில் உள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன் பிரபல ரவுடி வினோத் கண்ணன் இதே பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்யோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.