உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / லஞ்சம் கொடுத்தால் தான் ஃபைல் மூவ் ஆகும்? | Bribe case | Pollachi

லஞ்சம் கொடுத்தால் தான் ஃபைல் மூவ் ஆகும்? | Bribe case | Pollachi

பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி பெயர் மாற்றம், சொத்து வரி விதிப்பு, கட்டிட அனுமதி உள்ளிட்ட அனைத்திற்கும் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய கட்டணத்துடன், அதிகாரிகளுக்கும் உரிய தொகை செலுத்தினால் மட்டுமே, பைல் மூவ் ஆகும் என்பது எழுதப்படாத விதி. இந்தக் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில் நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் லஞ்சம் கொடுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பொள்ளாச்சி நகராட்சி வருவாய் பிரிவுக்கு பயனாளி ஒருவர் சென்றார். அங்குள்ள நகராட்சி வருவாய் ஆய்வாளரிடம் பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறார். அப்பாக்கு வயதாகிவிட்டது. கொஞ்சம் பீஸ் குறைச்சுப் போடுங்க. சீக்கிரம் பெயர் மாற்றம் செய்து கொடுத்தால் வங்கியில் கடன் வாங்க வசதியாக இருக்கும் என கூறுகிறார். அதற்கு அந்த வருவாய் ஆய்வாளர், சரி சொன்னபடி செய்தால் உடனே நடவடிக்கை எடுக்கலாம். எனக்கு தர வேண்டியதில் செய்து கொடுக்கிறேன், என உறுதியளிக்கிறார். அந்த நபர் பதிவு செய்து வெளியிட்ட வீடியோ வாயிலாக சொத்து வரிக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்த வீடியோவில் உள்ள வருவாய் ஆய்வாளர் கொங்குராஜிடம் கேட்ட போது, பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட பணிகளுக்காக மட்டுமே தொகை கேட்டேன். அதைத்தான் அவர்கள் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர், என கூலாக கூறினார். ஏற்கனவே இவர் மீது கமிஷனர் கணேசனிடம் புகார் கூறப்பட்டது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் கூறினார். தற்போது வருவாய் ஆய்வாளர் மீண்டும் லஞ்ச வீடியோவில் சிக்கியது நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

டிச 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ