உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கல்கி படத்தில் கலக்கும் புஜ்ஜி கார் கோவையில் தயாரானது எப்படி?

கல்கி படத்தில் கலக்கும் புஜ்ஜி கார் கோவையில் தயாரானது எப்படி?

இந்திய திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கல்கி 2898 ஏ.டி., என்ற பான் இந்தியா சினிமா படம் வெளியீடு தேதி நெருங்கி வரும் நிலையில் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. இதற்கு காரணம் இந்த படத்தில் வரும் புஜ்ஜி என்ற கார் கோவையில் தயாரானது தான். நாக் அஸ்வின் இயக்கத்தில் தயாராகும் கல்கி 2898 ஏ.டி., படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். அறிவியல் சார்ந்த கதை களத்தில் தயாராகும் இந்த படத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர் பிரபாசின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமாக புஜ்ஜி என்ற வாகனம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் முன்பக்கம் இரண்டு சக்கரமும், பின்பக்கம் ஒரேயொரு சக்கரமும் உள்ளது. படத்தில் கலக்கும் இந்த காரை கோவையில் உள்ள ஜெயெம் ஆட்டோமோட்டிவ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த கார் எப்படி தயாரிக்கப்பட்டது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ