/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ ஒரே இடத்தில் குவிந்த 12000 ஆல்பட்ராஸ்| butterfly census| Kerala
ஒரே இடத்தில் குவிந்த 12000 ஆல்பட்ராஸ்| butterfly census| Kerala
கேரளா ஆரளம் வனவிலங்கு சரணாலயத்தில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு முகாம் நடந்தது. வன தேவதை, புத்த மயூரி, மலபார் ரோஸ், தளிர் நீலி, ஓக் வகை நீலன், மலபார் பட்டை வாலன் உள்ளிட்ட 266 இன பட்டாம்பூச்சிகள் பதிவு செய்யப்பட்டன மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் தனித்தன்மை வாய்ந்த 17 இனங்கள் கண்டறியப்பட்டது சுமார் 12,000 ஆல்பட்ராஸ் பட்டாம்பூச்சிகள் ஒரே இடத்தில் குவிந்தன. கண்ணூர் முதன்மை வன பாதுகாவலர் தீபா, ஆரளம் வனவிலங்கு காப்பாளர் பிரதீப் தலைமையில் 60 நிபுணர்கள் கணக்கெடுப்பு முகாமில் பங்கேற்றனர் ஆரளம் வனவிலங்கு பகுதியை பட்டாம்பூச்சிகள் சரணாலயமாக அறிவிக்க வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுத்தனர்
ஜன 19, 2025