குறைந்து போன பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி
பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி வழக்கத்தைவிட இந்த ஆண்டு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இவை ஆண்டுக்கு இரண்டு முறை கிழக்கு தொடர்ச்சி மலையில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைக்கு இடம் பெயருகின்றன. ஆனால் இந்த ஆண்டு மழை பொழிவு குறைவானதால் பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சியும் குறைந்துள்ளதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர். பல ஊர்களை தாண்டி வரும் பட்டாம்பூச்சிகள் வனப்பகுதியை தவிர நகர்ப்பகுதிகளிலும் பறந்து வருகின்றன. அப்படி பறந்து வரும்போது அவை கார்களின் கண்ணாடிகளில் அடிபட்டும் இறந்து விடுகின்றன. தங்களின் வண்ணங்கள் வாயிலாக கண்களுக்கு விருந்தளிக்கும் பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்ச்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜன 05, 2024