உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி | விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி | விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய நிதியமைச்சரின் அறிவிப்பு

கர்ப்பப்பை வாய் புற்றுநோயை நாம் குணமாக்கவும் முடியும். அதை வராமலும் தடுக்கவும் முடியும். இதை தடுப்பூசியாலும், பரிசோதனை செய்தும் அதை தடுக்க முடியும். ஆனால் இப்படி ஒரு தடுப்பூசி இருக்கிறதா என்பது மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்த பின்னர் தான் பெரும்பாலானவர்களுக்கு தெரிய வந்துள்ளது. 9 முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடலாம். இது தவிர 45 வயது வரை உள்ள பெண்களும் போட்டுக் கொள்ளலாம்.ஆண்களும் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். இந்தியாவில் ஒரு சதவீத பெண் குழந்தைகள் தான் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். மீதி 89 சதவீதம் பேர் இன்னும் போட வேண்டியுள்ளது. இது மற்ற புற்றுநோய்களை போன்று அல்லாமல் தடுக்கக்கூடியது என்பதால் தடுப்பூசியை கண்டிப்பாக போட்டுக் கொள்வதற்கான காரணங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

பிப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !