தமிழ்நாட்டில் முதல்முறையாக சீனா டெக்னாலஜி...! கோவைக்கு வந்தாச்சு கேப்சூல் ரூம்ஸ்
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே எல் ஆண்டு டி பைபாஸ் சாலையில் தனியார் சார்பில் கேப்சூல் ரூம்ஸ் என்ற பெயரில் சிறிய அறைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. மும்பையில் இது போன்ற கேப்சூல் அறைகள் வாடகைக்கு கிடைக்கிறது. அதுபோன்ற ஒரு செட்டப் தற்போது கோவையில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பொருட்கள் சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்டு தற்போது தயார் படுத்தப்பட்டுள்ளது. பைபாசில் காரில் செல்பவர்கள் சில மணிநேரம் ஓய்வு எடுக்க வேண்டுமென்றால் இந்த கேப்சூல் ரூம்ஸ் பயன் உள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தவிர சிறிய அளவில் கூட்டம் நடத்த வேண்டுமென்றாலும் அதற்கும் மீட்டிங் ஹால்கள் உள்ளன. கோவையில் புதிய கான்செப்டில் வந்துள்ள இந்த கேப்சூல் ரூம்ஸ்களில் உள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விவரிக்கிறது.