உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வேகமாக வந்த கார் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது | Car Accident | 3 death | Udumalpet

வேகமாக வந்த கார் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது | Car Accident | 3 death | Udumalpet

கேரளா மாநிலம் திருச்சூர் வடக்கன்சேரி ஆத்துாரை சேர்ந்தவர் சுஜித் வயது 47. குடும்பத்தினருடன் காரில் பழநி நோக்கி சென்றார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பாலப்பம்பட்டி நடுநிலைப்பள்ளி முன் பஸ் ஸ்டாப் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் இருந்த பயணிகள் நிழற் குடையில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் ராஜகோபால், மோகன்ராஜ், ரங்கசாமி ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பஸ் நிழற்குடை இருக்கையில் அமர்ந்திருந்த சதாசிவம் படுகாயமடைந்தார். காரில் பயணித்த சுஜித், அவரது மனைவி அஸ்வதி வயது 25, குழந்தைகள் கவுதம் சுஜித் வயது 9, திருக்கயில் சுஜித் வயது 4 மற்றும் ரிமானி வயது 75 ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பிடலில் அட்மிட் செய்தனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாலையை முறையாக அமைக்காததால் திருப்பூர் - பழநி வழித்தடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தினர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். மறியலால் மாலை 4 முதல் 6 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை