120க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| Carrom | Sports | School sports
120க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு| Carrom | Sports | School sports திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடக்கு குறுமைய ஆண்கள் கேரம் போட்டி நடந்தது. திருப்பூர் பள்ளி கல்வித்துறை சார்பில் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியை நஞ்சப்பா மாநகராட்சி தலைமை ஆசிரியர் கர்னல், குறுமையக் கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் துவக்கி வைத்தனர். 14,17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் போட்டி நடக்கிறது. 28 பள்ளிகளைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் களத்தில் உள்ளனர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவர்கள் மண்டலம் மற்றும் மாவட்டப் போட்டிக்கு தகுதி பெறுவர் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்