ஆர்வமுடன் பங்கேற்ற அரசு ஊழியர்கள்
கோவை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடந்த பத்தாம் தேதி துவங்கி நேற்று வரை நடந்தது. பள்ளி, கல்லூரி, பொது பிரிவினருக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் அரசு துறை ஊழியர்களுக்கான கேரம் போர்டிகள் நடந்தன. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கதிர்வேல் முதலிடத்தையும் சண்முகம் இரண்டாம் இடத்தையும் துரைமுருகன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். பெண்கள் ஒற்றை ஏரி பிரிவில் பிரபா முதல் எழுத்தையும் மேரி திவ்யா இரண்டாம் இடத்தையும் ப்ரியா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இரட்டையர் ஆண்கள் பிரிவில் சண்முகம்_ துரைமுருகன் ஜோடி முதல் இடத்தையும் கதிர்வேல்- சுரேந்திரன் ஜோடி இரண்டாம் இடத்தையும், சிவசுப்பிரமணியன் -ராஜ் ஜோடி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
செப் 24, 2024