உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 3,600 ஆண்டுக்கு முந்தைய கோவையின் வரலாறு | அதிசயிக்கும் அகழ்வாராய்ச்சி | Coimbatore

3,600 ஆண்டுக்கு முந்தைய கோவையின் வரலாறு | அதிசயிக்கும் அகழ்வாராய்ச்சி | Coimbatore

கோவையின் ஜீவ நதி என்று அழைக்கப்பட்ட நொய்யல் ஆற்றோரமும் புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை நகருக்கு மேற்கே நொய்யல் ஆற்று பள்ளத்தாக்கில் வடிவேலம்பாளையத்துக்கு அருகில் மோளப்பாளையம் என்ற கிராமத்தில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கடல்சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டனர். இந்த கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு புதிய கற்கால மக்கள் வாழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சியின் போது முதலில் பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. அந்த பானை ஓடுகள் மிகவும் வித்தியாசமாக காணப்பட்டன. மேலும் மனித, விலங்கு எலும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. அத்தகைய தொல்லியல் சான்று பொருட்கள் இங்கு கிடைத்திருப்பதால் இங்கு புதிய கற்கால மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது. இந்த அகழ்வாராய்ச்சி கோவையை சுமார் 3 ஆயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு சென்று புதிய கற்கால மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறது. கோவை அருகே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஆக 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி