திட்டமிடாமல் கட்டப்பட்ட பாலங்கள் திருத்தப்படுமா? Coimbatore
கோவையில் பல இடங்களில் பாலங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சில பாலங்களில் சில மாற்றங்கள் செய்தால் தான் அவற்றை முழுமையாக பயன்படுத்த முடியும். கோவை அவினாசி சாலை மேம்பாலத்தின் சுற்றளவை குறைத்தால் இன்னும் அதிக வாகனங்கள் செல்ல முடியும். ஆனால் அந்த மாற்றத்தை இன்னும் செய்யாமல் உள்ளனர். இதே போல திருச்சி சாலையில், சுங்கம் ரவுண்டானா பாலம், காந்திபுரம் 2வது அடுக்கு மேம்பாலம் ஆகிய பாலங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். பாலங்களை எப்படி கட்டக்கூடாது என்பதற்கு உதாரணம் கோவையில் உள்ள சில பாலங்கள் தான். திட்டமிடாமல் கட்டப்பட்டுள்ள இந்த பாலங்களில் திருத்தம் செய்ய புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.பி., வேட்பாளர்கள் முயற்சிக்க வேண்டும் என்று கோவை மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். இது குறித்த வீடியோ தொகுப்பை காணலாம்.