கோவைக்கு தேவை சுரங்க நடை பாதை...
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக பொருளாதாரத்தில் முன்னேறிய நகரமான கோவையில் கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் சுரங்கநடைபாதை இல்லை என்பது தான். சாலைகளில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கடக்கும் இடங்களில் கூட சுரங்க நடைபாதை இல்லாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது. ஆனால் சில இடங்களில் நடைமேம்பாலம் கட்டி அதை யாரும் பயன்படுத்தாத நிலை உள்ளது. எனவே கோவை மாநகருக்கு சுரங்க நடைபாதை எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஏப் 08, 2024