பக்தர்கள் வழிபாட்டுக்காக தேர் நிலை நிறுத்தம் | 1,000 Years old Chariot | Hosur
ஓசூரில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா நடைபெறும், விழாவில் ஸ்ரீ மரகதாம்பிகை அம்மன், ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மற்றும் விநாயகர் ஆகிய மூன்று சுவாமிகளின் தேரோட்டம் நடக்கும் பக்தர்களால் ஆயிரம் ஆண்டுகள் இழுக்கப்பட்ட பழமையான ஸ்ரீ மரகதாம்பிகை அம்மன் தேருக்கு பதிலாக புதிய தேர் செய்து தேரோட்டம் நடைபெற்றது. பழைய தேர் ஓசூர் தேர்ப்பேட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆயிரம் ஆண்டுகள் ஓடிய பழைய தேரை நினைவு பொக்கிஷமாக பாதுகாக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்கள் கண்டெய்னரில் தேரை ஏற்றி ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலை கோயிலுக்கு கொண்டு வந்தனர். கோயில் முன்பு கிரேன்கள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் தேரை கண்டெய்னரில் இருந்து இறக்கி தேர் நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பழைய தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கோயிலுக்கு வரும் பக்தர்கள் 1,000 ஆண்டுகள் ஓடிய தேரை பய பக்தியுடன் வணங்கி செல்கின்றனர்.