உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / தமிழக டாக்டர் சங்கம் கண்டனம் | chennai doctor issue protest | Kovai

தமிழக டாக்டர் சங்கம் கண்டனம் | chennai doctor issue protest | Kovai

கிண்டி கலைஞர் பல்நோக்கு அரசு மருத்துவமனைக்குள் புகுந்து புற்று நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் பாலாஜி ஜெகநாதனை விக்னேஷ் என்ற இளைஞன் கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் தமிழகத்தையே உலுக்கிப் போட்டது. இதைக் கண்டித்தும், மருத்துவத்துறையினருக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அரசு ஹாஸ்பிடல் மெடிக்கல் காலேஜில் இன்று மதியம் முதல் மருத்துவ மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இப்போராட்டம் நாளையும் தொடரும். எனினும் கோவை அரசு ஹாஸ்பிடலில் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்படும் என மருத்துவர் சங்கம் அறிவித்தது.

நவ 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை