மாணவ மாணவியர் ஆர்வம் | Cheran Cup Chess Tournament
கோவை எஸ்.எம்.எஸ்., கலை அறிவியல் கல்லுாரி சார்பில் சேரன் கோப்பை 2024 செஸ் போட்டி நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர் பிரிவில், 10 வயதுக்கானோர் போட்டியில், சாய் ஆன்ந்த், மெய்யப்பன், தேவதருண்; 12 வயது பிரிவில், பிரணவ் தர்சன், மிதுன் இறையன்பு, ஜெரோம் அருள்ராஜ்; 14 வயது பிரிவில், சிவகுரு, மெய்யப்பன், மிதுன் இறையன்பு; 19 வயது பிரிவில் சஞ்சய் ராஜ், சக்திஷ், பிரவீன் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். மாணவியர் பிரிவில், 10 வயதுக்கானோர் பிரிவில், பிரகன்யா, தென்மது, நிகிதா; 12 வயது பிரிவில் ஈஷாசதன், செல்வலட்சுமி, ஜனனி; 14 வயது பிரிவில், அர்ஷினி, அர்ஷிதா, அனுஸ்ரீ; 19 வயது பிரிவில் சம்ஹிதா, தாராஸ்ரீ, அனுஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறை பேராசிரியர் அன்பழகன், கலாம் ஸ்போர்ட்ஸ் அகாடமி ஒருங்கிணைப்பாளர் பாரத், எஸ்.எம்.எஸ்., கல்லுாரி முதல்வர் பாக்யலட்சுமி பரிசுகளை வழங்கினர்.