9 வீரர்கள் அசத்தல் வெற்றி| District chest tournament| Isha| Rural students | covai
9 வீரர்கள் அசத்தல் வெற்றி| District chest tournament| Isha| Rural students | covai அவனே (Avane) செஸ் அசோசியேஷன் சார்பில் பொள்ளாச்சி ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில் மாவட்ட செஸ் போட்டி நடைபெற்றது. பல்வேறு வயதிற்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டிகள் ஆண் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக நடத்தப்பட்டது. போட்டியில் ஈஷா அறக்கட்டளை மூலம் பயிற்சி பெற்ற 27 கிராமப்புற மற்றும் பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு பிரிவுகளில், 9 மாணவர்கள் வெற்றி பெற்று அசத்தினர். ஏழு வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மத்வராயபுரத்தை சேர்ந்த எழில்மதி மற்றும் சம்யுக்தா வெற்றி பெற்றனர். 15 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் ஜெயசூர்யா, பிரனிஷ், நந்தனா, நந்திதா, சத்யா மற்றும் ப்ரணிதா ஆகியோர் வெற்றி பெற்றனர். ஈஷாவில் துறவியாக இருக்கும் சுவாமி தத்யா, சுற்றுப்புற கிராம மற்றும் பழங்குடியின குடியிருப்புகளில் இருக்கும் மாணவர்களுக்கு இலவச செஸ் பயிற்சி அளித்து வருகிறார். மாணவர்கள் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க ஈஷா மூலம் அனைத்து உதவிகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் கீழ் பயிற்சி பெறும் மாணவர்கள் மாவட்ட அளவில் ஏழு பரிசுகளை தட்டி சென்றது உற்சாகத்தையும் நம்பிக்கையும் கொடுத்துள்ளது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஈஷா சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.