பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தீர்ப்பு முன்மாதிரியா இருக்கணும்
சமுதாயத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பெண் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் குறித்து எடுத்துக் கூறி விழிப்புணர்வுடன் இருக்குமாறு பெற்றோர் அறிவுறுத்த வேண்டும். பெண் குழந்தைகளை மட்டும் பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும் என்பது பெற்றோருக்கு கட்டாயம் இல்லை. ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தைகள் சரியான முறையில் வளர்க்கப்படும் போது தான் ஒரு பெண் குழந்தைக்கு பாதுகாப்பு கிடைக்கும். பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள் அனைத்துக்கும் போதை பழக்கம் தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது. பெண் குழந்தைகளுக்கு கொடுமைகள் இழைப்பவர்களை தண்டிப்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.