உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குன்னூர் செபஸ்தியார் தேவாலய பங்கு திருவிழா கோலாகலம் | Church Festival

குன்னூர் செபஸ்தியார் தேவாலய பங்கு திருவிழா கோலாகலம் | Church Festival

நீலகிரி மாவட்டம் குன்னூர் புனித செபஸ்தியார் தேவாலய பங்கு திருவிழா கடந்த 19ம் தேதி கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி தினமும் ஜெபமாலை ஆராதனை, திருப்பலி நடந்தன. அதைத் தொடர்ந்து ஆசீர்வதிக்கப்பட்ட அம்புகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக புனிதரின் திரு உருவ தேர்பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. செண்டை மேளம் முழங்க பங்கு மக்கள் வண்ண குடைகள சூழ மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக வந்தனர். தேவாலயத்தில் துவங்கிய ஊர்வலம் மவுண்ட் ரோடு பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் தேவாலயத்தை அடைந்தது. கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஊர்வலத்தில் திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர்.

ஜன 30, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ