உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கொலம்பியா மற்றும் கியூபா வீரர்கள் முன்னிலை

கொலம்பியா மற்றும் கியூபா வீரர்கள் முன்னிலை

கொலம்பியா மற்றும் கியூபா வீரர்கள் முன்னிலை | IM norm| closed circuit chess | International chess tournament| covai கோவை அலங்கார் ஹோட்டலில் நடந்து வரும் 39வது தமிழ்நாடு ஐஎம் நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியின் ஏழாவது சுற்று விறுவிறுப்பாக நிறைவடைந்தது. ஏழாவது சுற்று இறுதியில் கொலம்பியாவைச் சேர்ந்த பலென்சியா மொராலஸ் வில்சன் கில்லர்மோ, கியூபாவைச் சேர்ந்த ஓட்டெரோ அகோஸ்டா டயஸ்மானியுடன் டிரா செய்து தற்போது 6 புள்ளிகளுடன் முன்னிலை பெற்றார். கியூபாவைச் சேர்ந்த கோம்ஸ் சான்செஸ் ஜார்ஜ் மார்கோஸ் 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கியூபாவைச் சேர்ந்த ஓட்டெரோ அகோஸ்டா டயஸ்மானி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். தலா ரெண்டு புள்ளியில் இருக்கும் இந்தியாவைச் சேர்ந்த முகுந்த் ஹேமந்த் அகர்வால், பெரு நாட்டைச் சேர்ந்த ஒப்லிடாஸ் கார்லோமக்னோவை வென்றார். இந்திய வீரர்கள் நந்திஷ் மற்றும் குமரேஷ் தலா 3.5 புள்ளிகளில் போட்டியை சமன் செய்தனர். அர்ஜென்டினா வீரர் கிளாவரி ரவுல் 2 புள்ளிகளுடன், 3.5 புள்ளிகள் பெற்ற இந்திய வீரர் சம்யக் தரேவாவுவை சமன் செய்தார். போட்டி தொடர்ந்து நடக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

டிச 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை