சூப்பர் லீக் சுற்றில் நான்கு அணிகள் பங்கேற்பு | CM Trophy kho kho tournament| covai
சூப்பர் லீக் சுற்றில் நான்கு அணிகள் பங்கேற்பு | CM Trophy kho kho tournament| covai கோவை கற்பகம் பல்கலையில் மாநில அளவிலான முதல்வர் கோப்பை கோ-கோ போட்டிகள் அக்டோபர் 4ம் தேதி துவங்கியது . போட்டியில், 38 அணிகள் களம் இறங்கினர். இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற 8 அணிகள் கால் இறுதியில் பங்கேற்றனர். முதல் காலிறுதி போட்டியில், கோவை மற்றும் திருப்பூர் அணிகள் விளையாடின. இதில், 18-8 என்ற புள்ளி கணக்கில் கோவை மாவட்ட அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் சிவகங்கை மற்றும் மதுரை அணிகள் மோதினர். இதில், 12-9 என்ற புள்ளி கணக்கில் சிவகங்கை அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் கன்னியாகுமரி மற்றும் ஈரோடு அணிகள் விளையாடினர். இதில், ஈரோடு அணி 17-11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. நான்காவது காலிறுதிப் போட்டியில், திருநெல்வேலி மற்றும் சென்னை அணிகள் விளையாடின. இதில் 14-10 என்ற புள்ளிகள் அடிப்படையில் சென்னை அணி வெற்றி பெற்றது. கால் இறுதியில் வெற்றி பெற்ற கோவை, சிவகங்கை, சென்னை மற்றும் ஈரோடு அணிகள் சூப்பர் லீக் சுற்றுக்கு தகுதி பெற்றன. எஸ்.டி.ஏ.டி., மண்டல முதுநிலை மேலாளர் அருணா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி, கற்பகம் பல்கலை துணை வேந்தர் ரவி, உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, இன்றும் போட்டிகள் நடக்கிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.