/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவையில் 15 மடங்கு அதிகரித்த சி.என்.ஜி., வாகனங்கள் | Coimbatore
கோவையில் 15 மடங்கு அதிகரித்த சி.என்.ஜி., வாகனங்கள் | Coimbatore
கோவையில், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக இப்போது சி.என்.ஜி., என்ற அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்கள் அதிகரித்துள்ளன. கோவை மாவட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பங்கில் தான் சி.என்.ஜி., சப்ளை செய்யப்பட்டது. தற்போது 31 பங்குகளில் சி.என்.ஜி., சப்ளை செய்யப்படுகிறது. இன்றைய தேதியில் 5 ஆயிரம் சி.என்.ஜி., வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இது கிட்டத்தட்ட 15 மடங்கு அதிகமாகும். பெட்ரோல் வாகனங்களில் இதற்கான கிட் பொருத்தி விட்டால் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி., இரண்டையும் மாற்றி மாற்றி பயன்படுத்தலாம். கோவையில் 90 சதவீத ஆட்டோக்கள் சி.என்.ஜி.,க்கு மாற்றப்பட்டு விட்டன. கோவையில் அதிகரித்து வரும் சி.என்.ஜி., வாகனங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மே 12, 2024