உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய வேளாண் துறைக்கு தவறான கணக்கு காட்டிய தமிழக வேளாண் அதிகாரிகள் | Accusation of coconut producer

மத்திய வேளாண் துறைக்கு தவறான கணக்கு காட்டிய தமிழக வேளாண் அதிகாரிகள் | Accusation of coconut producer

விவசாய விளைபொருட்களின் விலையில் சரிவு ஏற்படும் போது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்கிறது. தேங்காய், கொப்பரை விலை சரிவு ஏற்படும் போது மத்திய அரசு ஆதார விலை திட்டத்தை அறிவிக்கிறது. மத்திய அரசின் நேபட் நிறுவனம் வாயிலாக குறைந்தபட்ச ஆதார விலையில் கொப்பரைக் கொள்முதல் செய்யப்படுகிறது. இதற்கான அறிவிப்பு மாநில அரசுகள் வாயிலாக வெளியிடப்படுகிறது. மாநில அரசு கொடுக்கும் விலை பொருட்களின் உற்பத்தி அளவில் நான்கில் ஒரு பங்கு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது மத்திய அரசின் விதியில் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒரு மரதத்தில், ஒரு ஆண்டுக்கு 62 தேங்காய்கள் தான் உற்பத்தி ஆகிறது என தமிழக வேளாண் அதிகாரிகள் மத்திய வேளாண் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினர். அதன் அடிப்படையில் தான் தமிழகத்தில் 50,000 மெட்ரிக் டன் கொப்பரை கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது என தென்னை விவசாயிகள் கூறினர். ஒரு சில விவசாய அமைப்புகள் டில்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் வேளாண் அதிகாரிகளை சந்தித்தபோது தமிழக அரசு தேங்காய் உற்பத்தி அளவை குறைவாக தெரிவித்தது தெரியவந்தது. அப்போது விவசாயிகள் ஒரு மரத்திற்கு குறைந்தபட்சம் 120 - 150 தேங்காய்கள் ஒரு ஆண்டில் உற்பத்தியாவதாக தெரிவித்தனர். அதற்கு மாநில அரசு கொடுத்த கணக்கின்படியே கொப்பரை கொள்முதல் செய்வதாக மத்திய வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தாண்டாவது விவசாயிகளிடம் விசாரித்து தேங்காய் உற்பத்தி கணக்கை மத்திய அரசிடம் மாநில வேளாண் அதிகாரிகள் கொடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் எதிபார்க்கின்றனர்.

மார் 06, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ