வருகிறது கோடைக்காலம்! உயருகிறது இளநீர் விலை 45 ரூபாய்க்கு
பொள்ளாச்சி இளநீர் முதல் தரமானது. பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிடைக்கும் இளநீரைத் தான் பொள்ளாச்சி இளநீர் என்று அழைக்கப்படுகிறது. முன்பு உள்ளூருக்கு மட்டும் சப்ளை செய்யப்பட்ட இளநீர் தற்போது மற்ற மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தற்போது தினமும் மூன்று லட்சம் பொள்ளாச்சி இளநீர் சப்ளையாகிறது. கோடைக்காலங்களில் இளநீருக்கு அதிகம் தேவை இருக்கும். தமிழகத்தில் தேவைக்கு போதுமான இளநீர் உற்பத்தி செய்யப்படுவதில்லை. பொள்ளாச்சி இளநீர் தேவை இந்த ஆண்டு எப்படியிருக்கும் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 02, 2025