மாராத்தானை இணைந்து வழங்கிய தினமலர் நாளிதழ் | Coimbatore | Awareness marathon
கோவை உருவான நாள் விழா நவம்பர் 24 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக போதைக்கு எதிரான மராத்தான் போட்டி நடைபெற்றது. போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக போட்டிகள் நடத்தப்பட்டன. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மரத்தானை துவக்கி வைத்தார். போட்டியில் 2,500 பேர் பங்கேற்றனர். போட்டி துவங்கும் முன் பங்கேற்பாளர்கள் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுத்து கொண்டனர். 2.5 கிலோ மீட்டர், 5, 10, 15 கிலோ மீட்டர் தூரம் என போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது. மராத்தான் போட்டிகளை தினமலர் நாளிதழ் இணைந்து வழங்கியது. போட்டிகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்றனர்.