யுனைடெட் கூடைப்பந்து கழக அணி சாம்பியன் | Coimbatore | Basketball match
விங்க்ஸ் கூடைப்பந்து கழகம், இந்தியா டேக்ஸ் பேயர் மற்றும் இ கிளவுட் எனர்ஜி சார்பில், பிரீடம் கோப்பைக்கான மாவட்ட கூடைப்பந்து போட்டி கோவை மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நடைபெற்றது. மாணவ மாணவியருக்கு 14, 19 வயது பிரிவிலும், ஆண்கள் ஓபன் பிரிவில் நடைபெற்ற போட்டியில் 60 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் நாக் அவுட் முறையில் நடைபெற்றன. ஆண்கள் ஓபன் இறுதிப்போட்டியில் யுனைடெட் கூடைப்பந்து கழக அணி 67 - 58 என்ற புள்ளிக்கணக்கில் அன்னுார் கூடைப்பந்து கழக அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 3 ம் இடத்துக்கான போட்டியில் கே.பி.ஆர் ஸ்போர்ட்ஸ் கிளப் 57 - 50 என்ற புள்ளிக்கணக்கில் சிக்ஸர்ஸ் அணியை வென்றது. மாணவர்கள் 14 வயது பிரிவில் பெர்க்ஸ் பள்ளி அணி 77 - 27 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.ஜி சர்வஜனா பள்ளியையும், 19 வயது பிரிவில் பெர்க்ஸ் பள்ளி அணி 93 - 60 என்ற புள்ளிக்கணக்கில் சபர்பன் பள்ளியையும் வீழ்த்தி முதலிடத்தை பிடித்தன. மாணவியர் 14 வயது பிரிவில், எஸ்.வி.ஜி.வி அணி 30 - 17 என்ற புள்ளிக்கணக்கில் அல்வேர்னியா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.