உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 56 வகையான 300 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு | Coimbatore | Dock fair Coimbatore

56 வகையான 300 க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு | Coimbatore | Dock fair Coimbatore

கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப் சார்பில் தனியார் கல்லூரி வளாகத்தில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் நாட்டு இன நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கன்னி, கோம்பை இனங்கள் மற்றும் ஜெர்மன் செப்பர்ட், கிரேட் டேன், பாக்ஸர், புள் டாக், டால்மேசன், கிரெடவுன், சைபீரியன் ஹஸ்கி போன்ற வெளிநாட்டு இனங்கள் பங்கேற்றன. 56 வகையான 300 க்கும் மேற்பட்ட நாய்கள் கலந்து கொண்டன. நாய்களின் வயது, உடல் அமைப்பு, உயரம், எடை, ஓடும் வேகம் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நாய்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட நாய்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஜூன் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !