பலே ஆசாமி கைது; பெண்ணுக்கு வலைவீச்சு | Coimbatore crime case
கோவை சின்னியம்பாளையத்தில் மகளிர் சுய உதவிக் குழு செயல்படுகிறது. இவர்களை அணுகிய சூலூர் செலக்கரிச்சலை சேர்ந்த விஜயா மற்றும் அன்பழகன் ஆகியோர் தாங்கள் அறக்கட்டளை நடத்தி வருவதாக கூறினர். மாற்றுத்திறனாளி பெயரில் அறக்கட்டளை தொடங்கினால் வெளிநாட்டில் இருந்து வட்டி இல்லாமல் பல கோடி கடன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினர். அதற்காக குழு உறுப்பினர்கள் தலா 5 லட்சம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும் என்றனர். இவர்களது பேச்சை நம்பிய மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த இருவர் கடந்த வாரம் தலா 5 லட்சம் ரூபாயை விஜயா மற்றும் அன்பழகனிடம் கொடுத்தனர். பணத்தை பெற்று கொண்டு தம்பதி மறுநாள் ஒரு பெட்டியுடன் அப்பெண்களை சந்தித்து கொடுத்தனர். இந்த பெட்டியில் உங்களுக்கு கொடுக்க வேண்டிய 6 கோடியே 75 லட்சம் இருக்கிறது. இருவரம் சமமாக பிரித்து எடுத்து கொள்ளுங்கள் எனக்கூறி சென்றனர். பெட்டியை பெண்கள் திறந்து பார்த்தனர். அதில் பணத்துக்கு பதிலாக கட்டுக், கட்டாக காகிதங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சூலூர் போலீசில் புகார் கூறினர். விசாரணை நடத்திய போலீசார் பட்டணம் பகுதியில் பதுங்கியிருந்த அன்பழகனை கைது செய்தனர். தலைமறைவான விஜயாவை தேடுகின்றனர்.