/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ பயிற்சியாளர்களுக்கு ரூபாய் மாலை, கிரீடம் அணிவித்து உற்சாகம்| Coimbatore |National Kudo game
பயிற்சியாளர்களுக்கு ரூபாய் மாலை, கிரீடம் அணிவித்து உற்சாகம்| Coimbatore |National Kudo game
தேசிய அளவிலான இரண்டாவது கூடோ தற்காப்பு கலை விளையாட்டு போட்டிகள் ஹிமாச்சல பிரதேச மாநிலம் சோலானில் நடைபெற்றது. இதில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், அரியானா உள்ளிட்ட 25 மாநிலங்களை சேர்ந்த 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு அணி சார்பாக கோவை குணியமுத்தூர் பிரேம் எம்.எம்.ஏ. அகாடமி, டைட்டன்ஸ் எம்.எம்.ஏ.கிளப், மற்றும் ஷான் அகாடமி கிளப்பை சேர்ந்த 16 பேர் பங்கேற்றனர். 9 வயது முதல் 21 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் வெவ்வேறு பிரிவுகளில் ஒரு தங்கம், மூன்று வெள்ளி, ஐந்து வெண்கலம் என 9 பதக்கங்கள் வென்று அசத்தினர்.
ஜூன் 08, 2024