/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 3,000 க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
3,000 க்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 9 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் நடந்தது. காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் குண்டம் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மொத்தம் 41 அடி நீளம் 11 அடி அகலத்தில் குண்டம் அமைத்து பூக்கள் தூவப்பட்டன. பக்தர்கள் குண்டத்துக்காக விறகு கட்டைகளை வழங்கினர். மாலை 6.30 மணிக்கு சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் இரவு 10.00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
பிப் 24, 2024