கூடுதல் விலைக்கு உதவும் விவசாய குளிர்பதன கிடங்கு
கோவை மாவட்டத்தில் விவசாய விளைப் பொருட்களை எந்த வகையிலும் கெட்டுப்போகாத வகையில் பாதுகாப்பதற்காக குளிர்பதன கிடங்கு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் 10 இடங்களில் இத்தகைய குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வாழை இலை உள்ளிட்ட காய்கறிகள் இங்கு வைக்கப்பட்டு வளை குடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல விவசாயிகள் ஒருங்கிணைந்து காய்கறிகளை குளிர்பதன கிடங்குகளில் வைத்து ஒரு மாதத்துக்கு 50 டன் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். விவசாயிகளின் முன்னேற்றத்தில் குளிர்பதன கிடங்குகள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
நவ 06, 2024