A.B.C.D. என நான்கு அணிகள் போட்டி | College Sports
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் விளையாட்டு தின விழா கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி மாணவர்கள் ஏ,பி,சி,டி, என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டனர். இதில் கபடி, ஹேண்ட் பால், கால்பந்து, கிரிக்கெட், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கிறது. துவக்க நாளில் மாணவர்களுக்கான கபடி மற்றும் ஹேண்ட்பால் போட்டிகள் நடைபெற்றன. கபடி இறுதிப் போட்டியில் பி டிவிஷன் அணி 31 - 17 என்ற புள்ளிக் கணக்கில் சி டிவிஷன் அணியை வீழ்த்தியது. ஹேண்ட்பால் போட்டியில் பி டிவிஷன் அணி 15 - 12 என்ற கோல் கணக்கில் சி டிவிஷன் அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது.
பிப் 28, 2024