உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீலகிரி மலை ரயிலுக்கு 125 வது பிறந்த நாள் | Nilgiri Mountain Railway

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வது பிறந்த நாள் | Nilgiri Mountain Railway

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நீலகிரியில் ரயில் பாதை அமைக்க 1854 ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பல்வேறு கட்டப்பணிகளுக்கு பிறகு 1899, ஜூன் 15ல் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு முதல் ரயில் சேவை துவங்கியது. கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இந்த மலை ரயிலுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது. சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் இந்த சிறப்பு பெற்ற மலை ரயிலில் தமிழ், மலையாளம், இந்தி உட்பட பல மொழிகளில் சினிமா படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை எக்ஸ் கிளாஸ் ரயில் இன்ஜின்கள் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் இன்ஜின்கள் மூலமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் சிறப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜூன் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை