ரவுண்டானாவால் வந்த குழப்பம்... வாகன ஓட்டிகள் அவதி
கோவை கோர்ட்டு வளாகம் முன்பு உள்ள ரவுண்டானாவில் தற்போது போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது. இதனால் காலை, மாலை நேரங்களில் அந்த இடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துக்களும் நடக்கின்றன. கோர்ட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், ரெயில் நிலையம், அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு இந்த ஒரு வழி மட்டுமே இருப்பதால் அனைத்து வாகனங்களும் கோர்ட்டு வளாகம் முன்பு கடும் நெரிசலுக்குள்ளாகின்றன. இதற்கு எதிராக ஒரு வழக்கறிஞர் கோவை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். கோவை கோர்ட்டு வளாகம் முன்பு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
ஜன 08, 2025