கோவை ஸ்ரீகிருஷ்ணா கல்லுாரி ஏற்பாடு | Cricket Match
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில் மாநில அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி கோவைப்புதுார் ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. முதல் அரையிறுதிப் போட்டியில் அரசு தொழில்நுட்பக் கல்லுாரி அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி அணியை வீழ்த்தியது. இரண்டாம் அரையிறுதியில் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லுாரி அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கற்பகம் இன்ஜினீயரிங் கல்லுாரி அணியை வீழ்த்தியது. ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் கே.ஜி. கல்லுாரி அணியை வீழ்த்தியது. சி.எம்.எஸ்., கல்லுாரி அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் எஸ்.என்.எம்.வி. கல்லுாரி அணியை வீழ்த்தியது. வெற்றி பெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.