உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.வி. லட்சுமணன் செட்டியார் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி கோலாகலம் | Cricket Match

ஏ.வி. லட்சுமணன் செட்டியார் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி கோலாகலம் | Cricket Match

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியான 12 வயதுக்கு உட்பட்டோருக்கான ஏ.வி. லட்சுமணன் செட்டியார் கோப்பைக்கான போட்டிகள் சக்தி இன்ஜினீயரிங் மற்றும் பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரி மைதானங்களில் நடக்கிறது. இதன் அரையிறுதிப் போட்டி பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. அதில் கல்லாறு சச்சிதானந்த ஜோதி நிகேதன் மற்றும் சி.எஸ். அகாடமி பள்ளி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் சேர்த்தது. அடுத்து விளையாடிய சி.எஸ். அகாடமி அணி 13.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

பிப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ