உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி | Cricket Match

கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி | Cricket Match

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியான 12 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்ற ஏ.வி. லட்சுமணன் செட்டியார் கோப்பைக்கான இறுதிப்போட்டி பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சி.எஸ். அகாடமி பள்ளி அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ராமகிருஷ்ணா அணி 20 ஓவர்களில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அணிக்காக சஞசீவ் ஆதித்யா 45 ரன்கள் எடுத்தார். சி.எஸ். அகாடமி அணியின் கிஷான் மூன்று விக்கெட் வீழ்த்தினார். அடுத்து விளையாடிய சி.எஸ். அகாடமி அணி வீரர் விவான் நரேன் 71 ரன்கள் எடுத்து அசத்தினார். 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழந்து 108 ரன்கள் எடுத்து சி.எஸ். அகாடமி அணி கோப்பையை வென்றது.

பிப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ