காஸ்மோஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதல் ரன்னர்-அப்| casagrand CPL | cricket tournament| Covai
காஸ்மோஸ் சூப்பர் கிங்ஸ் அணி முதல் ரன்னர்-அப்| casagrand CPL | cricket tournament| Covai கோவை சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி அருகே மடாலயம் மைதானத்தில் காசா கிராண்ட் சார்பில் கம்யூனிட்டி பிரீமியர் லீக்-2026 எனும் சி.பி.எல்., சீசன்-1 கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 4ம் தேதி துவங்கியது. ரெட் டென்னிஸ் பந்து வைத்து போட்டி நடைபெற்ற போட்டியில் 16 அப்பார்ட்மென்ட் அணிகள் களமிறங்கினர். லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது. லீக் போட்டியில் 10 ஓவரும், நாக் அவுட் போட்டியில் 15 ஓவருக்கான போட்டி நடந்தது. முதல் அரையிறுதியில் ஸ்பாண்டன் சார்க்ஸ் அணியினர் 12 ஓவரில் 72 ரன் எடுத்தனர். காஸ்மோஸ் சூப்பர் கிங்ஸ் அணியினர் 9.1 ஓவரில் 74 ரன் எடுத்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இரண்டாம் அரையிறுதியில் குபேரா தண்டர்ஹாக்ஸ் அணியினர் 12 ஓவரில் 90 ரன் எடுத்தனர். ஜெயின் அண்டாரா சூப்பர் கிங்ஸ் அணியினர் 11.4 ஓவரில் 93 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். இறுதிப்போட்டியில், ஜெயின் அன்டாரா சூப்பர் கிங்ஸ் அணியும், காஸ்மோஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் மோதினர் ஜெயின் அணியினர் 15 ஓவரில் 148 ரன் எடுத்தனர். காஸ்மோஸ் சூப்பர் கிங்ஸ் அணியினர் 12.4 ஓவரில் 85 ரன் எடுத்து தோல்வியடைந்தனர். மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில் ஸ்பாண்டன் சார்க்ஸ் அணியும், குபேரா தண்டர்ஹாக்ஸ் அணியும் மோதினர் ஸ்பாண்டன் அணியினர் 12 ஓவரில் 168 ரன் எடுத்தனர். குபேரா அணியினர் 12 ஓவரில் 108 ரன் எடுத்து நான்காம் இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு காசாகிராண்ட் விற்பனை மேலாளர் சரத்குமார் சாம்பியன்ஷிப் ட்ராபி, சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டிகளை அனைவரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.