கோவையில் சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்திய தினமலர் பசுமை சைக்கிளத்தான்
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தினமலர் நாளிதழ் சார்பில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் நேரு கல்விக்குழுமம் இணைந்து, கோவை மாநகர காவல் துறை ஒத்துழைப்புடன், கோவையில் பசுமை சைக்கிளத்தான் நிகழ்ச்சி நடந்தது. சுங்கம் பை-பாஸ் வாலாங்குளம் பகுதியில், காலை 7:30க்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பங்கேற்று விழிப்புணர்வு பேரணியை, கொடியசைத்து துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கோட்ட மேலாளர் தீபக்குமார், ரீடெய்ல் மேனேஜர் பிரேமலதா ஆகியோர், பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். பசுமை சைக்கிளத்தான், சுங்கம், நிர்மலா கல்லுாரி, ரெட்பீல்ட்ஸ், ரேஸ்கோர்ஸ் சுற்றுவட்டப்பாதை வழியாக தாமஸ் பார்க் அடைந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதுபற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.