/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 'தினமலர்' சார்பில் விழிப்புணர்வு | சைக்கிள் ஓட்டுவோம்... சுற்று சூழல் பாதுகாப்போம்!
'தினமலர்' சார்பில் விழிப்புணர்வு | சைக்கிள் ஓட்டுவோம்... சுற்று சூழல் பாதுகாப்போம்!
உலக சுற்று சூழல் தினத்தை முன்னிட்டு தினமலர், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் நேரு கல்வி குழுமங்கள் இணைந்து பசுமை சைக்கிளத்தான் நடத்தின. காலை 7:15 மணிக்கு கோவை மகளிர் பாலிடெக்னிக்கிலிருந்து புறப்பட்ட சைக்கிளத்தான் பாலசுந்தரம் சாலை வழியாக ரேஸ்கோர்ஸ் தாமஸ் பார்க் அடைந்தது. 15 வயது பூர்த்தியான ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் டீ-சர்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. காற்று மாசை நீக்கி சுற்று சூழலை பாதுகாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு சைக்கிளத்தான் பயணத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினார்கள். அது பற்றிய வீடியோ தொகுப்பை இங்கு காணலாம்.
ஜூன் 29, 2025