உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை ஈஷா யோகா மையத்தில் போலீஸ் ரெய்டு | detailed investigation in Esha yoga centre | Kovai

கோவை ஈஷா யோகா மையத்தில் போலீஸ் ரெய்டு | detailed investigation in Esha yoga centre | Kovai

கோவையை சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ். இவரது மனைவி சத்யஜோதி. மகள்கள் கீதா வயது 27, லதா வயது 25. இரண்டு மகள்களையும் கோவை ஈஷா யோகா மையம் துறவியராக மாற்றி விட்டது. மகள்களை சந்திக்கக்கூட ஈஷா நிறுவனம் மறுப்பதாகவும் பேராசிரியர் காமராஜ் குற்றம் சுமத்தினார். மகள்களை ஒப்படைக்கோரும் ஆட்கொணர்வு மனுவை பேராசிரியர் காமராஜ் சென்னை ஐகோர்டில் தாக்கல் செய்தார். மனுவில் ஈஷா மையத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடக்கிறது. டாக்டர் ஒருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே ஈஷா மையத்துக்கு எதிரான வழக்குகளை கைவிடும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இளைய மகள் லதா தனது தந்தைக்கு போனில் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீஸ் மற்றும் சமூக நலத்துறைக்கு உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இன்று காலை ஈஷா யோகா மையத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் எஸ்பி கார்த்திகேயன் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈஷா மையத்தில் போலீசார் ரெய்டு நடத்தி வருவது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அக் 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !